திருமங்கலம்: கோவில் திருவிழாவில் கறி விருந்து
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அம்மாபட்டியில் அனைத்து சமுதாய மக்களுக்கும் பொதுவான காவல் தெய்வமாக உள்ள சடச்சியம்மன் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படிப்படையில் நேற்று (நவ. 16) நடந்த திருவிழாவில் சுமார் 60 ஆடுகள், 100 கோழிகள் பலியிடப்பட்டு கறி விருந்து தயார் செய்யப்பட்டது. அதன் பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரத்தில் பூஜைகள், ஆராதனைகள் நடைபெறுகின்றன. அதன் பிறகு சமபந்தி முறையில் அனைத்து மக்களுக்கும் விருந்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.