திருமங்கலம் - Thirumangalam

திருமங்கலம்: பூச்சிமருந்து சாப்பிட்டு தற்கொலை செய்த தம்பதியர்

திருமங்கலம்: பூச்சிமருந்து சாப்பிட்டு தற்கொலை செய்த தம்பதியர்

மதுரை மாவட்டம் திரு மங்கலம் அருகே உள்ள ஏ. தொட்டியபட்டி கிராமத்தில் நித்தியானந்தம்(65) இவரது மனைவி ஆவடையம்மாள்(56) ஆகியோர் வசித்து வந்தனர். இந்த தம்பதிகளுக்கு பல வருடங்களாகியும் குழந்தை இல்லை. இவர் திமுக கிளை செயலாளராக இருந்துள்ளார்.  இந்நிலையில் நேற்று (நவ. 21) இரவு வீட்டு வாசலில் அமர்ந்து உறவினர்களிடம் பேசிவிட்டு உறங்கச் செல்வதாக கூறி வீட்டுக்குள் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று (நவ. 22) காலை வீட்டிற்கு வழக்கமாக நித்யானந்தம் வீட்டிற்கு பால் ஊற்றும் பால் வியாபாரி வந்துள்ளார்.  வீட்டுக் கதவும் திறந்தே கிடந்துள்ளது. வெகு நேரமாக அழைத்தும் இருவரும் வெளியே வராததால் உள்ளே சென்று பார்த்தபோது மயங்கிய நிலையில் இருவரும் கிடந்துள்ளனர். மேலும் பூச்சி மருந்து வாடையும் அடித்துள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினரை அழைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் உயிரிழந்து கிடந்துள்ளனர். உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా