மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா தொட்டப்ப நாயக்கனூர் கிராமம் அருகே ஆதிதிராவிடர் மக்களுக்கு சுமார் 208 பயனாளிகளுக்கு 1998 ஆம் ஆண்டு சர்வே எண் 532/5a, 533/5a ல் தலா இரண்டு, மூன்று சென்டு வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டது.
கடந்த மாதம் குறிப்பிட்ட 96 க்கும் மேற்பட்ட பட்டாக்களை தனி தாசில்தார் அவர்கள் ரத்து செய்துள்ளார்.
ரத்து செய்யப்பட்ட பட்டாக்களுக்கு மீண்டும் அவர்களுக்கே பட்டா வழங்ககோரியும், அதேபோல் அந்த பகுதி ஆதிதிராவிடர் மக்களுக்கு வீட்டுமனை இல்லாத 60க்கும் மேற்பட்ட மக்களுக்கு வீட்டுமனை வழங்க கோரியும் தனி தாசில்தார் அவர்களிடம் மனுவாக கொடுக்கப்பட்டது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் -தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து உசிலை ஒன்றிய குழு செயலாளர் ராமர், கிளைச் செயலாளர் சங்கிலி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.