மதுரை மாவட்டம் பேரையூர் பகுதிகளில் சில்லரைத் தட்டுப்பாடு பேருந்துகளில் மட்டுமே நிலவிய நிலையில் , தற்போது பெட்டிக்கடைகள் முதல், டிபார்ட்மென்டல் ஸ்டோர் வரை விரிவடைந்து பெரும்பாலான ஓட்டல்கள், மளிகை கடை, பெட்டிக் கடைகளில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்கள் தட்டுப்பாட்டால் தவிக்கின்றனர்.
அலைபேசியில், கியூ. ஆர். , கோடு, டெபிட் கார்டு பயன்படுத்து வோருக்கு பிரச்னையில்லை. சாமானிய மக்கள் பலர் பணத்தை ரொக்கமாக வழங்கும்போது இப்பிரச்னை ஏற்படுகிறது. இதனால் மீதி சில்லரை வழங்குவதற்குப் பதிலாக சாக்லெட், மிட்டாய்களை வழங்குவதால் இதனால், இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.
தற்போது கடைக்காரர்கள் 100 ரூபாய்க்கு, ஐந்து வீதம் கமிஷன் கொடுத்து சில்லரை வாங்கி வியாபாரம் செய்கின்றனர். எனவே, வங்கிகள், சில்லரை மேளாவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.