திருமணத்திற்கு மிரட்டுவதாக இளம் பெண் புகார்

60பார்த்தது
திருமணத்திற்கு மிரட்டுவதாக இளம் பெண் புகார்
மேலூர் அருகே திருமணத்திற்கு மிரட்டுவதாக தாய் உட்பட 7 பேர் மீது இளம் பெண் புகார் அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பெருமாள்பட்டி ராணுவ காலனியை சேர்ந்தவர் மகாலிங்கம் மகள் ஜானுஸ்ரீ (19). இவர் தான் திருமணம் செய்து கொள்ளும்படி அவரது தாய் கௌரி (42) உறவினர்கள் தட்சிணாமூர்த்தி, ரமேஷ், சித்ரா, சூர்யா, சாந்தி, பாண்டியம்மாள் ஆகியோர் தாக்கி, கொடுமைப்படுத்துவதாக கூறி ஜானுஸ்ரீ மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.

இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி