மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருகே அப்பன் திருப்பதி எருக்கலநத்தத்தை சேர்ந்த செல்வம்(37). நேற்று (அக். 2) அப்பகுதியில் உள்ள நாடக மேடையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த இவரது சகோதரர் சரவணன்(32), சகோதரி இளையராணி (42) ஆகியோர் பீர் பாட்டிலை உடைத்து செல்வம் கழுத்தில் குத்தினார்கள். போலீசாரின் விசாரணையில் சொத்து தகராறில் இவர்கள் குத்தியதாக தெரிய வந்தது. இதுகுறித்து அப்பன்திருப்பதி போலீசார் இருவர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.