கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்.

75பார்த்தது
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்.
மேலூர் அருகே கருங்காலக்குடி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மதுரை சென்ட்ரல் ரோட்டரி கிளப் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு பேரீட்ச்சம்பழம், அத்திப்பழம் , நிலக்கடலை, மற்றும் உலர் திராட்சை ஆகியவை உள்ளடக்கிய ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா வட்டார மருத்துவ அலுவலர் பி. சண்முகபெருமாள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மதுரை சென்ட்ரல் ரோட்டரி கிளப் தலைவர், உபதலைவர்,
செயலாளர், உள்ளிட்டோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி