
மதுரை சித்திரை திருவிழா.. மக்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிப்பு
மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் நீர், மோர் வழங்குவதற்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி சான்று பெற்றால் மட்டுமே நீர், மோர் வழங்க அனுமதி வழங்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. பக்தர்களால் வழங்கப்படும் சர்பத், குளிர்பானங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி சான்று அவசியம் என கூறப்படுகிறது. இதற்கு https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.