மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் ஹரிணி ஆறுமுகம் நகர் இரண்டாவது தெருவை சேர்ந்த புதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் ரமேஷ் தங்கராஜ் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகிய இருவரும் QUEEN டிரேடிங் என்ற பெயரில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இருமடங்கு லாபம் தருவதாக கூறி தங்க விடுதி ஒன்றில் கூட்டம் நடத்தியுள்ளனர்.
இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட நபர்களிடம் தலா குறைந்தபட்சம் 5 லட்சம் முதலாக 20 லட்சம் வரை முதலீடு பெற்றுள்ளனர்.
மேலும் மதுரை , கோயம்புத்தூர் சேலம் , திருச்சி , கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இவர்களுடைய பங்குச்சந்தையில் முதலீடு செய்த நிலையில் 3 மாதங்களான முதலீட்டிற்கான லாப தொகையினை வழங்கியுள்ளனர். இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் லாபம் இல்லாத நிலையில் பணத்தை திரும்ப ஒப்படைப்பதாக இருவரும் கூறிய நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் இருவரையும் தொடர்பு கொள்ள முயன்ற போது செல்போனில் தொடர்பு கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் 20 லட்சம் ரூபாய் வரையும் ஏமாற்றமடைந்து நிற்கிறோம்.
எனவே தங்களுடைய பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மீண்டும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புகார் மனு நேற்று அளித்தனர்.