வக்பு திருத்த சட்டம்;விடுதலைசிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

82பார்த்தது
இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் வகையில் மத்திய பாஜக அரசு வக்பு வாரிய சட்ட திருத்தம் நிறைவேற்றியுள்ளதாக கூறி மத்திய பாஜக அரசை கண்டித்தும், வக்புவாரிய சட்டத்திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டியும் மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முதன்மை செயலாளர் பாவரசு தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் ஏராளமான இஸ்லாமிய அமைப்பினரும் இஸ்லாமியர்களும் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி