திமுக - அதிமுக மோதலாக மாறிய கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினை

82பார்த்தது
திமுக - அதிமுக மோதலாக மாறிய கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினை
திமுக - அதிமுக மோதலாக மாறிய கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினை

மதுரை: திமுக - அதிமுக மோதலாக மாறிய கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினை இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற திமுகவினர், 'அண்ணே தலைவரே (முதல்வர் ஸ்டாலின்) கப்பலூர் டோல்கேட் அகற்றப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். அதைச் சொல்லி பொதுமக்கள் எங்களை திட்டுறாங்க அண்ணே' என்றனர்.

அதுபோல், கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக ஆதரவாளர்கள், 'சுங்கச்சாவடியை அகற்றியே தீர வேண்டும்' என்று வலியுறுத்தினர். பொதுமக்கள், வணிகர்களை தாண்டி, தற்போது
கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினை, திமுக - அதிமுக மோதலாக உருவெடுத்துள்ளது. அதை உறுதி செய்வதுபோல், சுங்கச்சாவடி பிரச்சினைக்கு தீர்வு காண அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவதும், முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார், பொதுமக்கள், வணிகர்களை திரட்டி போராட்டம் நடத்துவதுமாக இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமலேயே தொடர்கிறது.

தொடர்புடைய செய்தி