தேய்பிறை அஷ்டமி கோயில்களில் சிறப்பு வழிபாடு

62பார்த்தது
தேய்பிறை அஷ்டமி கோயில்களில் சிறப்பு வழிபாடு
மதுரை மாவட்ட கோயில்களில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கோயில்களில் கால பைரவர் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. மதுரை அண்ணா நகர் சர்வேஸ்வர ஆலயம், மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் ஆலயம், அண்ணா நகர் தாசில்தார் நகர் சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில் உள்ள கால பைரவருக்கு பக்தர்கள் சார்பில், மஞ்சள்பொடி, பால், சந்தனம், பன்னீர் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.


கால பைரவருக்கு, வடை
மாலைகள் அணிவிக்கப்பட்டு, அர்ச்சணைகள் நடந்தது. மதுரை தாசில்தார் நகர் வர
சித்தி விநாயகர் ஆலயம், கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் ஞான சித்தி விநாயகர் ஆலயம், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வர ஆலயம், சோழவந்தான் பிரளய நாத சிவன் ஆலயம், மதுரை அவனியாபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, இன்று மாலை கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து, வடமாலை அணிவிக்கப்பட்டு, அர்ச்சனைகள் நடைபெற்றது.

ஏராளமான பெண்கள் தேங்காயில் தீபம் ஏற்றி கால பைரவரை வழிபட்டனர். பக்தர்கள், கால பைரவருக்கு தயிர் சாதம் படைத்து வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி