திருமலை நாயக்கர் மகாலில் புதுப்பிக்கும் பணி தீவிரம்.

373பார்த்தது
மதுரை திருமலை நாயக்கர் மகாலை புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள திருமலை நாயக்கர் மகாலை உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளும் ஆர்வத்துடன் சுற்றி பார்த்து மகாலின் அழகை ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அரண்மனை கட்டிடச் சுவர்களையும், அதன் பிரம்மாண்ட தூண்களையும் தொல்லியல் துறை பாதுகாக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து அவ்வப்போது பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறது.

இந்நிலையில், மத்திய அரசின் சிறப்புத் திட்டத்தில் ரூ. 11 கோடியில் அரண்மனையின் தரைத்தளம், நாடக சாலை, பள்ளி அறை மற்றும் தூண்களை அதன் பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. அதிகாரிகள் மற்றும் அமைச்சர் முதலானோர் அவ்வப்போது ஆய்வு செய்து வந்தனர்.

தற்போது மகாலின் முகப்பு பகுதியின் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட மணல், சுண்ணாம்பு உள்ளிட்ட பூச்சுப் பொருட்களின் கலவையை சில வாரங்கள் காயவைத்து புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி