பண்டிகை விளையாட்டு போட்டிகளில் யாரையும் புறக்கணிக்க கூடாது

65பார்த்தது
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "குண்டேந்தல்பட்டி கிராமத்தில் தீபாவளியையொட்டி அக். 31 முதல் நவ. 2 வரை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போட்டியை நடத்தும் வல்சார் கூட்டத்துக்கு பங்காளிகள் நாங்கள் வெளியூரில் இருந்து வந்ததாக கூறி எங்களிடம் வரி வசூல் செய்யாமல் புறக்கணிக்கின்றனர்.

ஏற்கெனவே கோயிலில் சாமி கும்பிடுவதிலும் எங்களை புறக்கணித்தனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சாமி கும்பிட உத்தரவு பெறப்பட்டது. இந்தாண்டு விளையாட்டுப் போட்டிகளில், எங்கள் தரப்பினரிடம் பணம் வசூல் செய்யாமலும், விளையாட்டு போட்டியில் எங்கள் குழந்தைகளை பங்கேற்க விடாமலும் புறக்கணிப்பு செய்கின்றனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர், திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே விளையாட்டு போட்டிக்கு வரி வசூலிக்கவும், எங்களை விளையாட்டில் பங்கேற்கவும் உத்தரவிட வேண்டும்' என்றனர்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி முரளி சங்கர், ' பண்டிகை காலங்களில் ஒரு தரப்பை புறக்கணிப்பு செய்து விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதை ஏற்க முடியாது. எனவே, மனுதாரர் தரப்பில் உரிய பங்களிப்பு தொகை பெற்று இரு தரப்பினரும் சேர்ந்து விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும். இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் போட்டி நடத்த போலீஸார் அனுமதி வழங்கக் கூடாது' என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி