நீத்தாா் நினைவு தினம்

71பார்த்தது
நீத்தாா் நினைவு தினம்
நீத்தாா் நினைவு தினம்

மதுரை மாவட்ட தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சாா்பில், நீத்தாா் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

மதுரை தல்லாகுளம் தலைமை தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் நடைபெற்ற நீத்தாா் நினைவு தின நிகழ்வில் மதுரை சரக தீயணைப்புத் துறை துணை இயக்குநா் விஜயகுமாா், மாவட்டத் தீயணைப்பு அலுவலா் வெங்கட்ராமன், உதவி மாவட்ட அலுவலா்கள் திருமுருகன், சுரேஷ், பாண்டி, செழியன், நிலைய அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டு, மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். இதில் தேசிய, மாநில அளவில் கடந்தாண்டு தீயணைப்பு பணியின்போது உயிரிழந்த வீரா்களின் பெயா்களும் வாசிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி