100 கிலோவிற்கு மேல் தங்க நகைகள் பறிமுதல்

71பார்த்தது
100 கிலோவிற்கு மேல் தங்க நகைகள் பறிமுதல்
மதுரை மாநகர் வண்டியூர் டோல்கேட் பகுதியில் நேற்றிரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தபோது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அந்த வாகனத்தில் 4 கோடி மதிப்பிலான தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. மதுரை விமான நிலைய பகுதியில் இருந்து வந்த அந்த வாகனத்தில் மாநகர் பகுதியில் உள்ள நகை கடைக்கு விற்பனைக்காக நகைகள் விநியோகம் செய்வதற்காக எடுத்துச்செல்லப்பட்டது தெரியவந்துள்ளது.


இதனையடுத்து வாகனத்தில் இருந்த4 கோடி மதிப்பிலான நகைகளுக்கான போதுமான ஆவணங்கள் இல்லாத நிலையில் வாகனமானது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கருவூலத்திற்கு கொண்டுவரப்பட்டது.

உரிய முழுமையான ஆவணங்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்த பின்னர் அதனை ஆய்வுசெய்த நகைகள் மீண்டும் நகைக்கடைகளின் நிறுவனத்திற்கு பாதுகாப்பாக ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோன்று நேற்று நள்ளிரவும் சரக்கு வாகனத்தில் எடுத்துவரப்பட்ட 4 கோடி மதிப்பிலான நகைகளுக்கான ஆவணங்கள் ஒப்படைத்தால் நகை மீண்டும் உரிய நிறுவனத்தினரிடம் ஒப்படைக்கப்படுமர என உதவி தேர்தல் அலுவலர் ஷாலினி தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சியினர் பண விநியோகம் மற்றும் வாக்காளர்களுக்கு பிரச்சாரத்தின் போது பணம் வழங்குவது போன்ற விவகாரங்களில் இதுவரையும் பெரிய அளவிலான நடவடிக்கைகள் மதுரை மாவட்டத்தில் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி