மதுரை: குடியிருப்புகளில் தேங்கிய நீர்; பொதுமக்கள் அவதி

80பார்த்தது
மதுரை மாநகராட்சி இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட அடமந்தை மற்றும் பாண்டியநகர் இரண்டாவது தெரு உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாவது நாளாக மழை நீர் குடியிருப்புகளில் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்னர்.

மேலும் நிவாரண முகாம்களில் தங்குவதற்கு அனுமதி தராமல் தங்களை விரட்டுவதாக அடமந்தை பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்னர். மாநகராட்சியாக இல்லாமல் கிராமமாக இருந்திருந்தாலே நன்றாக இருந்திருக்கும் நான்கு நாட்களாக சேறும் சகதியிலும் வாழ்கிறோம்.

அதிகாரிகள் மெயின் ரோட்டிலே நின்று விட்டு அப்படியே சென்று விடுகிறார்கள் எங்களுடைய நிலையை எட்டி கூட பார்க்கவில்லை என பொதுமக்கள் தங்களது வேதனை தெரிவித்தனர். அடமந்தை பகுதி மக்களை மனிதர்களாக கூட அதிகாரிகள் நினைக்கவில்லை என கொதித்தெழுந்த பெண்கள் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி