மதுரை மாவட்ட கிராமக் கோவில் பூசாரிகள் பொதுக்குழு கூட்டம் கிராம கோவில் பூசாரிகள் பேரவை மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து கிராம பூசாரிகளும் கலந்து கொண்டனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சோமசுந்தரம் கூறியதாவது,
திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கையில 406வது கோரிக்கையாகவும் அறிவிப்பாகவும் ஆட்சிக்கு வந்தால் எல்லா கிராம கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் கொடுப்போம் என்று அறிவித்தார்கள் ஆனால் இதுவரைக்கும் அறிவிக்கவில்லை.
2001 ல் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநி அவர்கள் 5000 பேருக்கு ஓய்வூதியம் கொடுப்போம் என்று அறிவித்திருந்தார். ஆனால் இவ்வளவு காலம் ஆகியும் கூடாது இன்னும் 4000 பேருக்கு கூட எட்டப்படவில்லை.
அதை குறைந்தபட்சம் 10, 000 பேருக்கு கொடுக்க வேண்டும். எல்லா கிராம கோவில்களுக்கும் இலவசம் மின்சாரம் கொண்டு வர வேண்டும். வேறுபாடு இல்லாமல் சிதலம் அடைந்த அனைத்து கோயில்களுக்கும் ரூபாய் 5 லட்சம் கொடுத்து புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கை வலியுறுத்தி முதலமைச்சரை சந்தித்து எங்களது கோரிக்கை வைத்துள்ளோம் கனிவுடன் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்திருந்தார்.