விருதுநகர், குறிப்பிட்ட சமூக நல சங்கத்தை சேர்ந்த செயலர் மகாலட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், விருதுநகர் பனையப்பட்டி பகுதியில் இறுதி ஊர்வலத்தின் போது தெருக்களை பயன்படுத்தாமல், பிரதான சாலை வழியாக சுடுகாட்டிற்கு செல்ல வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு விசாரணையின் போது பஞ்சாயத்துக்கு சொந்தமான சாலைகள், தெருக்கள் போன்றவற்றை வேறுபாடின்றி அனைவரும் பயன்படுத்தலாம், குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் என எந்த உரிமையும் இருக்க முடியாது. இந்த மனு பாகுபாடு காட்டுவதை ஆதரிக்கிறது என இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது. மேலும் மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.