மதுரை தமுக்கம் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி ஒருங்கிணைப்பில் மதுரை புத்தகத் திருவிழா-2024 கடந்த செப்டம்பர் 6 ஆம் நாள் தொடங்கி வைக்கப்பட்டது. தமுக்கம் மாநாட்டு மையத்தில் குளிரூட்டப்பட்ட வசதியுடன் 230க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது
ரூ. 10/- முதல் ரூ. 1, 000/- வரையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது. அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட சில பதிப்பகங்களில் பள்ளி மாணவர்களுக்கு 50% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
புத்தகத் திருவிழாவை பார்வையிட வருகை தரும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமுக்கம் மாநாட்டு மையத்தின் உள்ளரங்கில் 18 பெண் கழிப்பறைகள், 17 ஆண் கழிப்பறைகள் தனித்தனியே உள்ளன. வெளிப்புற மைதானத்தில் ஆண்கள் பெண்கள் என தனித்தனியே தலா 4 கழிப்பறைகள் உள்ளன. தினந்தோறும் மாலை 6. 00 மணியளவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது.
தொடர்ந்து தலைசிறந்த எழுத்தாளர், முன்னணி பட்டிமன்ற பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. புத்தகத் திருவிழா தொடங்கிய செப்.,06 முதல் இன்று (செப்.,11) வரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் உட்பட 1 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர்.