மதுரை மாநகராட்சி 2 ஆவது வார்டு திருமால்நகர் பகுதியில் ஆய்வின்போது ஆணையாளரின் காலணி சேற்றில் சிக்கியது. இதையடுத்து காலணியை கையில் எடுத்துகொண்டு வெறும் கால்களில் நடந்துவந்த ஆணையாளர் தனது வாகனத்தின் அருகே வந்து அணிந்து கொண்டார்.
எவ்வித தயக்கமும் இன்றி காலணியை கையில் எடுத்துசென்ற மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமாரின் செயல் பணியாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.