10 ரூபாய் தர மறுத்துததால் வழக்கறிஞர் மீது தாக்குதல்

65பார்த்தது
மதுரை மாநகர் சுந்தராஜபுரம் LL ரோடு பகுதியை சேர்ந்த வழக்கறிஞரான பாலசுப்ரமணியன் (66) என்பவர் அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பணி முடிந்து வீட்டிற்கு சென்றபோது வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்த நபர்கள் பாலசுப்ரமணியனிடம் 10 ரூபாய் செலவுக்கு பணம் வேண்டும் என கேட்டுள்ளனர்.

அப்போது தனது பையில் இருந்த 10 ரூபாயை அவர்களிடம் கொடுத்தபோது மேலும் கூடுதலாக 10 ரூபாய் கேட்டுள்ளனர். அதற்கு பாலசுப்ரமணியன் எதற்கு தர வேண்டும் என கேட்டபோது இருவரும் திடிரென வாக்குவாதம் செய்து அருகில் கிடந்த கட்டையை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த பாலசுப்ரமணியன் வலியால் துடித்துள்ளார்.

அப்போது கட்டையால் தாக்கிய இருவரும் பாலசுப்ரமணியனுக்கு கொலை மிரட்டலும் விடுத்து தப்பியோடினர். இதனையடுத்து அருகில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் காயமடைந்த பாலசுப்ரமணியனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துசென்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து காயமடைந்த பாலசுப்ரமணியன் ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் கீழ் ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெரு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (34) மற்றும் வள்ளுவர்தெற்குதெரு பகுதியை சேர்ந்த அசோக் (32) ஆகிய இருவரையும்
கைது செய்து நிதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி