மதுரை கிழக்கு ஒன்றியம் ம. சத்திரப்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதற்கு மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா தலைமை வகித்தாா். மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா. காா்த்திகா முன்னிலை வகித்தாா்.
இதில், தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, 151 மாணவ,
மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிப் பேசியதாவது:
பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள கிராமப்புற ஏழை மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனா்.
அனைவரும் கல்வி கற்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் இலவச பேருந்து பயண அட்டை வழங்குதல் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா் என்றார்.