மின் கட்டணம் உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

79பார்த்தது
மதுரை முனிச்சாலை பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மதுரை முனிச்சாலை பகுதியில் இன்று (ஜூலை 29) காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழக அரசு உயர்த்தி உள்ள மின் கட்டண உயர்வை கண்டித்தும், மாதந்தோறும் மின் அளவீடு செய்ய வேண்டும் என்று கோரியும், ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள். இதில் தாமஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி