வெடிகுண்டு சம்பவம் - சாட்சியங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு

85பார்த்தது
கடந்த 2011ம் ஆண்டு முன்னாள் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முத்த தலைவருமான L. K. அத்வானி ரத யாத்திரை செல்லும் வழியில் மதுரை திருமங்கலம் ஆலம்பட்டி பாலத்தில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டது.


இந்த சம்பவத்தில் 7 கிலோ வெடிப்பொருட்கள், எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜாகிர் உசேன், அப்துல் ரகுமான், இஷ்மத் ஹக்கீம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் இமாம் அலியின் கூட்டாளியான போலீஸ் பக்ருதீன், பிலால் மாலீக், அப்துல்லா ஆகியோரும் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு கடந்த 13 வருடங்களாக நடைபெற்றுவரும் நிலையில் பல்வேறு சாட்சிகள் இறந்துவிட்டனர். மேலும் பல சாட்சிகள் வெளியூர்களில் தங்கியிருந்து உயிர் அச்சத்துடன் வாழ்ந்து வருவதால் சாட்சிகள் சுதந்திரமாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் பைப் வெடிகுண்டு வைத்த குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பிவிட வாய்ப்பு உள்ளதாகவும், இந்த வழக்கில் சேர்க்கப்பட்ட சாட்சிகளை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் முத்துக்குமார் என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி