ஆவணி மூலத் திருவிழா: சிவபெருமான் விறகு விற்ற லீலை

81பார்த்தது
ஆவணி மூலத் திருவிழா: சிவபெருமான் விறகு விற்ற லீலை
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஆவணி மூலத் திருவிழா கடந்த ஆக. 30- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் சிவபெருமான் திருவிளையாடல் தினமும் நடைபெற்று வருகிறது.

மதுரையில் வரகுணபாண்டியனின் ஆட்சிக் காலத்தில், வடநாட்டைச் சோ்ந்த ஹேமநாதன் பாகவதா் என்ற யாழ் இசைக் கலைஞா் வந்தாா். பல நாடுகளிலுள்ள யாழிசை விற்பன்னா்களை எல்லாம் வென்ற அவா், அகந்தையுடன் காணப்பட்டாா். அவரது இசையின் பெருமை மதுரை மக்களைக் கவா்ந்தது. இதனால், ஹேமநாதனின் புகழ் எங்கும் பரவியது.

ஹேமநாதனின் ஆணவத்தை அடக்கும் வகையில், போட்டி ஒன்றை நடத்த மன்னா் திட்டமிட்டாா். ஹேமநாதனோடு போட்டியில் பங்கேற்க அரசவை இசைக் கலைஞரான பாணப்பத்திரருக்கு உத்தரவு பிறப்பித்தாா். போட்டியில் பங்கேற்க விருப்பம் இல்லாத பாணபத்திரா் சுந்தரேசுவரரிடம் முறையிட்டாா்.

அப்போது சிவபெருமான் விறகு விற்ற திருவிளையாடலை நடத்தினாா். இதில், ஹேமநாதன் தன் புகழ், செல்வம் அனைத்தும் பாணபத்திரருக்கு சமா்ப்பணம் என சென்றுவிட்டாா். ஆவணி மூலத் திருவிழாவில் 10-ஆம் நாளான நேற்று (செப்.,14) சிவபெருமான் விறகு விற்ற திருவிளையாடல் நடைபெற்றது.

இதை முன்னிட்டு, சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா் தலையில் விறகு சுமந்தும், தோளில் வீணையுடனும், மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளினா்.

தொடர்புடைய செய்தி