மதிய உணவுக்கு வழங்கப்படும் கூப்பன்களை பயன்படுத்தி வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கியதாக 24 பணியாளர்களை மெட்டா நிறுவனம் வேலை நீக்கம் செய்துள்ளது. ஒரு நாளைக்கு இந்திய மதிப்பில் ரூ.2,100 மதிப்பிலான மதிய உணவு கூப்பன் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் இந்த கூப்பனில் பேஸ்ட், சோப்பு, ஒயின் கோப்பை என வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கியுள்ளனர். இதனையறிந்த நிறுவனம் அவர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அவர்கள் ஆண்டுக்கு ரூ.3 கோடி வரை ஊதியம் பெற்றவர்கள்.