பொதுப்பெட்டி தயாரிக்க ரூ.1 கோடி செலவாகும். ஸ்லீப்பர் கோச் ஒன்றின் விலை ரூ.1.5 கோடி. அதேபோல் ஏ.சி கோச் தயாரிக்க ரூ.2 கோடி செலவாகும். ஒரு ரயில் இன்ஜினை உருவாக்க ரூ.18 கோடி முதல் ரூ.20 கோடி வரை செலவாகிறது. 24 பெட்டிகளுடன் கூடிய ஒரு முழு ரயிலை உருவாக்க ரூ.60 கோடி முதல் ரூ.70 கோடி வரை செலவாகிறது. தற்போது மக்கள் அதிகம் விரும்பும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை உருவாக்குவதற்கு ரூ.115 கோடி செலவாகும் என கூறப்பட்டுள்ளது.