தீபாவளி ஆஃபர்.. ரூ.1-க்கு பெட்ஷீட்.. முண்டியடித்த மக்கள்

59பார்த்தது
தீபாவளி ஆஃபர்.. ரூ.1-க்கு பெட்ஷீட்.. முண்டியடித்த மக்கள்
விருதுநகர் ராஜபாளையத்தில் தீபாவளி பண்டிகை சலுகையாக ஜவுளிக் கடையில் ஒரு ரூபாய்க்கு பெட்ஷீட் வழங்கியதால் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றுள்ளனர். இன்று முதல் 18, 19, 20 தேதி வரை 3 நாட்களுக்கு கடையில் பொருட்கள் வாங்கி, அதற்குப் பணம் செலுத்திய முதல் 165 வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஒரு ரூபாய்க்கு ஒரு பெட்ஷீட் வழங்கப்பட்டன. மேலும், ரூ.19-ல் இருந்து ரூ.499 வரை ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என அனைத்து தரப்பினருக்கான ஆடைகளும் அஃபரில் வழங்கப்பட்டன.