ஒரே நேரத்தில் 4 விதமான அறுவை சிகிச்சைகள்

82பார்த்தது
ஒரே நேரத்தில் 4 விதமான அறுவை சிகிச்சைகள்
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியைச் சோ்ந்த 41 வயதுடைய ஒரு ஆண், நெஞ்சுவலி, சளியில் ரத்தம் உள்ளிட்ட பிரச்னைகளுடன் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அண்மையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், இருதயத்தில் வீக்கம், எந்த நேரத்திலும் வெடிக்கக் கூடிய அளவில் இருதய வால்வில் அடைப்பு உள்பட 4 வகையான இருதயப் பிரச்னைகளால் அவா் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அவரது நோய் பாதிப்புகளின் தீவிரம் காரணமாக, ஒரே நேரத்தில் 4 வகையான அறுவைச் சிகிச்சைகளையும் மேற்கொள்ள மருத்துவா் ராம்பிரசாத் தலைமையிலான மருத்துவக் குழுவினா் திட்டமிட்டு, அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டனா். சுமாா் 12 மணி நேரம் இந்த அறுவைச் சிகிச்சைகள் நடைபெற்றன. பின்னா், தொடா் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த அவா் முழுமையாக குணமடைந்தாா்.

இதுகுறித்து மருத்துவா் ராம்பிரசாத் கூறியதாவது:

ஒரே நேரத்தில் இருதயத்தில் 4 வகையான அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்வது உலகளவில் மிகவும் அரிதானது. இந்த அறுவைச் சிகிச்சையை வேலம்மாள் மருத்துவமனையின் இருதய அறுவைச் சிகிச்சைப் பிரிவின் ஒரு மைல்கல்லாகவே கருதுகிறோம் என்றாா் அவா்.

தொடர்புடைய செய்தி