ரேஷன் அரிசி கடத்தியதாக 2353 பதிவு.!!!

57பார்த்தது
தென் மாவட்டங்களில் 16 மாதங்களில் ரேஷன் அரிசி கடத்தியதாக 2353 பதிவு - 31, 209 டன் அரிசி பறிமுதல் செய்யபட்டுள்ளதாக குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவின் மதுரை மண்டல காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது

தென் மாவட்டங்களில் மதுரை மண்டலத்தில் கீழ் 10 மாவட்டங்களில் ரேஷன் அரிசி மற்றும் நியாய விலை கடையில் பொருட்களை கடத்தி விற்பனை செய்ததாக 2652 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2956 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 2353 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 31, 20, 905 கிலோ (சுமார் 31, 209 டன்) ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடத்தலுக்கு பயன்படுத்திய 376 இரு சக்கர வாகனங்கள், 54 மூன்று சக்கர வாகனங்கள், 549 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 979 கடத்தல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முதல்முறையாக கேரளாவை சேர்ந்த அரிசி கடத்தல் மன்னன் அன்வர் கான் என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 20 பேர் மீது அரிசி கடத்தியதாக வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது

தமிழக கேரளா எல்லையில் அரிசி கடத்தல் தடுக்கும் வகையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவின் மதுரை மண்டல காவல் துறை தகவல் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்தி