முள்ளிப்பள்ளத்தில் 37 பேருக்கு பிளாட் ஒதுக்கீடு.

75பார்த்தது
முள்ளிப்பள்ளத்தில் 37 பேருக்கு பிளாட் ஒதுக்கீடு.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன.

உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், முழு வீடும் இடிப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அனைவரும் சமுதாய கூடம், ஊராட்சி மன்றம், காலனி-நூலகம், அரசு பள்ளி ஆகிய இடத்தில் தங்க வைக்கப்பட்டு, இளங்காளியம்மன் கோவில் தெரு இளைஞர் நற்பணி மன்றம் மூலமாக 150 பேர்களுக்கு உணவு, பால், தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

100% (நூறு சதவீதம்) முழு வீடும் பாதிக்கப்பட்டவர்களில் 45 பேர் கண்டறிந்து, உடனடியாக அதில் 37 பேர்களுக்கு, இன்று காடுப்பட்டி ஊராட்சியில் நல்ல தண்ணீர் உள்ள, 23 அடி ரோடு வசதியுடன், புதிய குடியிருப்புகள், புதிய பிளாட்களுக்கு அருகே, அரசு சார்பாக தலா 23*20 அளவுள்ள 37 பிளாட்கள் அளந்து கொடுக்கபட்டது.

ஒரு வாரத்தில் பட்டாவும் வழங்கப்படும் என முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி