முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் சட்டமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகளை நேரடி ஒலிபரப்பு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என கூறியிருந்தார். இதுகுறித்த வழக்கு விசாரணையில் வேலுமணி தரப்பு வழக்கறிஞர், எதிர்க்கட்சியினர் பேசும் போது நேரடி ஒளிபரப்பானது துண்டிக்கப்படுகிறது என கூறினார். இதற்கு சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என எந்த சட்டமும் இல்லை எனக்கூறி வழக்கு ஜனவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.