சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை

60பார்த்தது
சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை
மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறியுள்ளதால் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாலை லேசான மழை பெய்தது. எழும்பூர், புரசைவாக்கம், சென்னை சென்டிரல், நுங்கம்பாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கொளத்தூர், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், கோடம்பாக்கம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.

தொடர்புடைய செய்தி