சிறுத்தை தாக்கி 2 பேர் பலி - நிவாரணம் அறிவிப்பு

577பார்த்தது
சிறுத்தை தாக்கி 2 பேர் பலி - நிவாரணம் அறிவிப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதியில் மலைத்தோட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் 3 வயது குழந்தை உயிரிழந்தது. இதற்கு முன்னதாக பெண்கள் இருவர் சிறுத்தையால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து கோவையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் உயிரிழந்தார். இதனையடுத்து சிறுத்தையை பிடிக்க தமிழக வனத்துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறுத்தையால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி