மாதவிடாய் காலத்தில் விடுமுறை - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

82716பார்த்தது
மாதவிடாய்  காலத்தில் விடுமுறை - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
மாதவிடாய் காலத்தில் விடுமுறை விடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தை அணுகுமாறு மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பீகாரில் 2 நாட்கள் சம்பளத்துடன் விடுப்பு தரப்படுவதாகவும், கேரளாவில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு விடுப்பு வழங்கப்படுவதாகவும் மனுதாரர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். அதே போல், தமிழ்நாட்டிலும் மாதவிடாய் காலத்தில் விடுப்பு தரக்கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மாதவிடாய் ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தின் இயல்பான பகுதியாகும். மாதவிடாயை சந்திக்கும் ஒரு பெண்ணாகவே இதை கூறுகிறேன். குறைந்த அளவிலான பெண்களே கடுமையான மாதவிடாய் வலியால் பாதிக்கப்படுகிறார்கள். இவை மருந்துகள் மூலம் சரி செய்யக்கூடியவையே. மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்குவது தேவையற்றது' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி