கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்றும் சில சமயங்களில் 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்தது. இதையடுத்து, கோவளம், புதுகிராமம், கீழமணக்குடி, மேல மணக்குடி மீனவர்களின் சுமார் 500 நாட்டுப் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.