புதுச்சேரியின் காரைக்கால் கடற்கரையில் நேற்று (அக். 22) காதல் தோல்வியால் பெண்ணொருவர் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது கடலோர புறக்காவல் நிலைய காவலர் ரஞ்சித், இளம்பெண்ணை இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் உதவியுடன் காப்பாற்றி மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவலர் ரஞ்சித்தின் இந்த செயலை பாராட்டிய எஸ்.பி. சுப்ரமணியன் அவரை நேரில் வரவழைத்து பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.