முருகப்பெருமானுக்கு உகந்த விரதங்களில் கார்த்திகை விரதமும் ஒன்று. தை, ஆடி, கார்த்திகை ஆகிய 3 மாதங்களில் வரும் கார்த்திகை நட்சத்திரம் மிகவும் விசேஷம் நிறைந்ததாகும். சிவபெருமானின் நெற்றியில் இருந்து உதித்த குழந்தையை வளர்த்த 6 கார்த்திகை பெண்களை பெருமைபடுத்தும் விதமாக கார்த்திகை தினம் கொண்டாடப்படுகிறது. எவர் ஒருவர் கார்த்திகையில் விரதமிருந்து முருகனை வழிபடுகிறார்களோ, அவர்களுக்கு முருகன் சகல வரங்களை அளிப்பான் என்பது மக்களின் நம்பிக்கை.