மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், முதியோர் உதவித்தொகை, போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 244 மனுக்களை இன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு பெற்றுக்கொண்டார். தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.