கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜெகதேவி கிராமத்தின் அடிவாரத்தி எழுந்தளியுள்ள ஸ்ரீ பாலமுருகர் திருக்கோவிலில், 79-ம் ஆடிக் கிருத்திகை விழா கொடி ஏற்றத்துடன் துவங்கி பல்வேறு கட்ட பூஜைகளுடன் நடைபெற்று வந்தது. இதில் முக்கிய நிகழ்ச்சியான நேற்று மார்பில் உரல் வைத்து, உலக்கை கொண்டு மஞ்சள் இடிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவின் போது பரன்மேல் பக்தர்களை படுக்கவைத்து மார்பின்மீது உரல் வைத்து, உலக்கை கொண்டு மஞ்சல் இடிக்கப்பட்டது. பின்னர், இடிக்கப்பட்ட மஞ்சலை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். இதனைத் தொடா்ந்து, முருகன், அருண்குமார், ராமன் ஆகியோர் தங்களது முதுகில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கிய நிலையில் பால முருகனுக்கு மாலை அணிவித்தும், கற்பூரம் காட்டியும், குழந்தையை சுமந்து சென்றும் வேண்டுதலை நிறைவேற்றினா்.