தரம் இல்லாமல் மேற்கூரை புதுப்பிக்கும் பணி.

79பார்த்தது
கருமாண்டபதி ஊராட்சியில் தரம் இல்லாமல் மேற்கூரை புதுப்பிக்கும் பணி.
பணியை நிறுத்திய கிராம மக்கள்.
பெரியாகவுண்டனூர் அரசு தொடக்கப்பள்ளி மேற்கூரை புதுப்பிக்கும் பணி தரமில்லாததால் கிராம மக்கள் பணி நிருத்த்தம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் கருமாண்டபதி பஞ்சாயத்திற்க்கு உட்பட்ட பெரியாகவுண்டனூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப துவக்கப்பள்ளி கட்டிடம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது, ஆனால் தரமில்லாமல் கட்டி முடித்ததால், ஐந்தே ஆண்டில் மேற்கூரை மழைநீரில் கசிய ஆரம்பித்துவிட்டது, அதனைத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக துறை சார்ந்த அலுவலர்கள் முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததன் அடிப்படையில் தற்போது நிதி ஒதுக்கப்பட்டு புதுப்பிக்கும் பணி இரண்டு நாட்களாக நடைபெறுகிறது, ஆனால் மேற்கூரை முழுவதும் கொத்தாமல் அப்படியே எம் சென்ட் மட்டும் போட்டு பூசுவதாக தெரிகிறது, இதுதொடர்பாக ஒப்பந்ததாரர் சுரேசிடம் கேட்டதற்கு ஒதுக்கிய நிதிக்கு இவ்வளவுதான் பண்ண முடியும் என அலட்சியமாக பதிலளிக்கிறார், இதனால் முழுமையாக மேற்கூரையை கொத்தி மீண்டும் மழைநீர் கசியாத வண்ணம் தரமாக பணி செய்ய வேண்டும் எனவும் அது வரை பணி நிறுத்த வேண்டும் என தெரிவித்து துறைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி