கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், தாட்கோ துறை சார்பாக 8 பயனாளிகளுக்கு ரூ. 76 ஆயிரத்து 500 மதிப்பில் தற்காலிக ஊனம், கல்வி மற்றும் திருமணம் உதவித்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு அவர்கள் இன்று (30. 09. 2024) வழங்கினார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. அ. சாதனைக்குறள், தாட்கோ மாவட்ட பொது மேலாளர் திரு. வேல்முருகன் ஆகியோர் உள்ளனர்.