நெல்லை வி.கே. பகுதியில் உள்ள பள்ளியில் வேட்டையன், கோட் திரைப்படங்கள் திரையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிகளின் மன அழுத்தத்தைப் போக்க திரைப்படம் திரையிடப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளனர். அமலி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் கோட், வேட்டையன் படங்களை ரூ.25, ரூ.10 கட்டணம் பெற்றுக்கொண்டு ஒளிபரப்பியுள்ளனர். வசூலித்த பணத்தை திரும்ப ஒப்படைக்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.