பாரூர் ஏரியில் தண்ணீர் திறப்பு

1897பார்த்தது
பாரூர் ஏரியிலிருந்து முதல் போகபாசனத்திற்காக தண்ணீர் திறப்பு - கலெக்டர்  சரயு திறந்து வைத்தார்.
 
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான காலவாய்களில் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது‌. இதன் மூலம் 2397 ஏக்கர் நிலங்கள் பயன் பெறும் வகையில் 2024ம் ஆண்டு ஜூலை 1 முதல் நவம்பர் மாதம் 12ம் தேதி வரை 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதற்காக  பாரூர் ஏரியின் மதகை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே. எம் சரயு திறந்து வைத்தார்.
 
அதன்படி பாரூர் பெரிய ஏரியில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களின் மூலம் முதல் 5 நாட்களுக்கு நாற்று விட தண்ணீர் விட்ட பிறகு, பாசனம் மூலம் 3 நாட்கள் மதகை திறந்து விட்டும், 4 நாட்கள் மதகை மூடி வைத்தும் சுழற்சி முறையில் நாள் ஒன்றுக்கு 6. 00 மில்லியன் கன அடி வீதம் 01. 07. 2024 முதல் 12.11.2024 வரை மொத்தம் 135 நாட்களுக்கு 2397 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் 379 மில்லியன் கன அடிக்கு மிகாமல் முதல் போக பாசனத்திற்கு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினை பொறுத்து தக்தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிட ஆட்சியர் உத்தரவிட்டார்‌.
விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டுமென கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார். ‌

தொடர்புடைய செய்தி