கிருஷ்ணகிரி நகரம் 17-வது வார்டில் மக்களைத் தேடி மருத்துவம்

72பார்த்தது
கிருஷ்ணகிரி நகரம் 17-வது வார்டில் மக்களைத் தேடி மருத்துவம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் சீர்மிகு விடியல் ஆட்சியின் சீரிய திட்டமான
மக்களைத் தேடி மருத்துவம் கிருஷ்ணகிரி நகரம் 17-வது வார்டில் நேற்று 26. 09. 2024 வியாழக்கிழமை காலை 9: 30 முதல் மதியம் 2: 00 வரை நகரமன்ற உறுப்பினர் மரு. P. சுரேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பொதுமக்கள் 100 - 150 பேர் பயன்பெற்றனர். இதில் இரத்த அழுத்தம், சக்கரை நோய், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், டெங்கு காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்ற பிரச்சனைகளுக்கு மருத்துவர் ஆலோசனை, பரிசோதனை, மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. வீட்டிலிருந்து வர முடியாதவர்களுக்கு , பெயர் மற்றும் அலைபேசி எண் பதிவு செய்து வீட்டிற்கே சென்று சிகிச்சை வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி