தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு.

83பார்த்தது
தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கலுகொண்டபபள்ளியில் செயல்பட்டுவரும், ஓசூர் செராமிக்ஸ் கம்பெனியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்டோரும் உள்ளனர். இந்த நிலையில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் தொடர்பாக கம்பெனி நிர்வாகத்துடன் , செராமிக்ஸ் எல்பிஎப் யூனியன தலைவர் மஞ்சுநாதப்பா, மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலையில் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. மாத ஊதியம் குறைந்த பட்சம் ரூ. 4, 800 அதிக பட்சம் ரூ. 10, 000 எனவும் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு கையெழுத்தானது. இதில் ஓசூர் செராமிக்ஸ் எல்பிஎப் யூனியன் நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர் நல அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். ஊதியஉயர்வு பெற்றுதந்த செராமிக்ஸ் எல்பிஎப்யூனியன் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you