45 லட்சம் ரூபாய் செலவில் 3 வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

59பார்த்தது
ஓசூர் மாநகராட்சி 9 வது வார்டுக்கு உட்பட்ட பாரதியார் நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகறத. இங்கு மொத்தம் 465 மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். போதிய வகுப்பறை கட்டடம் இல்லாததால் மாணவ, மாணவிகள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து ஓசூர் ரவுண்ட் டேபிள், ஓசூர் லேடிஸ் சர்க்கிள் மற்றும் அது சார்ந்த அமைப்புகள் சார்பில் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் 3 வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணப்பா தலைமை வகித்தனர். ஓசூர் ரவுண்ட் டேபிள் தலைவர் கவுரி சங்கர், ஓசூர் லேடிஸ் சர்க்கிள் தலைவி இந்துரேகா ஆகியோர் முன்லை வகித்தனர்.

ரவுண்ட் டேபிள் தேசிய தலைவர் ராபின் அகர்வாலா, மாநில தலைவர் பிரதிக்குமார் வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தனர். கூடிய விரைவில் வகுப்பறை கட்டடங்களின் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, மாணவ, மாணவியர் கல்வி கற்க ஒப்படைக்கப்படும் என ஓசூர் ரவுண்ட் டேபிள் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி