ஸ்ரீ பசுவேஸ்வரா சுவாமி கோயிலில் பசவ ஜெயந்தி விழா

59பார்த்தது
ஓசூர் அருகே உள்ள கெலமங்கலத்தில் அருள்மிகு ஸ்ரீ பசவேஸ்வரா சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை மேற்பார்வையில் வீர சைவ லிங்காயத்து ஜங்கம் கமிட்டி டிரஸ்ட் சார்பில் பசவ ஜெயந்தி விழா நடைபெற்றது.

முன்னதாக கோயிலில் ஸ்ரீ பசவேஸ்வரா சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து ருத்ரா அபிஷேகம் தீபாதாரணை ஆகியவை நடைபெற்றது தொடர்ந்து இரவில் பாரம்பரிய முறைப்படி வீரகாசி நடனம் நடைபெற்றது. மேள தாளங்கள் இசைக்கு ஏற்ப நடந்த வீரகாசி நடனத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். தொடர்ந்து பல்லக்கு உற்சவமும் அக்னி குண்டம் இறங்குதலும் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய நடனமாடி பூசாரி பக்தர்கள் தலை மேல் தேங்காய்களை உடைத்து நேர்த்திககடன் செலுத்தப்பட்டது.

6 ஆண்டுகளுக்குப்பின் நடைபெற்ற இந்த பசவ ஜெயந்தி விழாவில் கெலமங்கலம், ஜிபி, சின்னட்டி, ஜே. காரப்பள்ளி, செட்டிப்பள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்த வீர சைவ லிங்காயத்து சமுதாய மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி