திருப்பத்தூர் மாவட்டம் பிச்சம்பாளையம் அருகே உள்ள போயம்பாளையத்தை சேர்ந்த பாபி இவரது மகன் பரணிதரன் (22) இவர் சம்வம் அன்று டூவீலரில் ஒசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். அப்போது முன்னால் சென்ற கார் எந்த சிக்னலும் காட்டாமல் திடீரென்று வலதுபுறமாக திருப்பியது. இதில் பரணிதரன் ஓட்டி சென்ற டூவீலரில் கார் மீது மோதியது. இதில் சாலையில் விழுந்த பரணிதரன் மீது அப்போது அந்த வழியாக வந்த லாரி மோதி சம்பவ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.